தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்படாதவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் விண்ணப்பித்து வந்தனர். இதில் கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களில் தகுதியான 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு டிசம்பர் 12 நாளை முதல் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவர் தொடங்கி வைத்தவுடன் விடுபட்ட தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
ஒருவேளை மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு அரசு சார்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணம் மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம்.
