ஐயோ அவருக்கு என்ன ஆச்சோ..! தாய்லாந்துக்கு பதறிக்கொண்டு ஓடிய மனைவி… ஹோட்டல் அறையில் கண்ட காட்சியால் ஷாக்.. அம்பலமான கணவரின் ரகசியம்…!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love
மலேசியாவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியிடம் அலுவலக ரீதியான பணி காரணமாக வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு, தனது காதலியுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் தாய்லாந்தில் தங்கியிருந்த சமயத்தில், அங்கு பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கணவரை அவரது மனைவியால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பதட்டமடைந்த மனைவி, கணவருடன் பணிபுரியும் ஒரு தோழியைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
அந்தத் தோழி மூலம் கணவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களைத் தெரிந்துகொண்ட மனைவி, தானே நேரடியாக அந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவர் அலுவலக சக ஊழியருடன் அல்லாமல், வேறொரு பெண்ணுடன் (காதலியுடன்) ஒரே அறையில் தங்கியிருப்பதை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சிக்கலால், கணவரின் இரகசியம் அம்பலமாகியுள்ளது.