“டேய் கீழ இறங்குடா”… உதவிக்கு போன நபரை மேலிருந்து கீழே தள்ளிவிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்… வெளியான ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரோட்டரி கிளப் நினைவு சின்னத்தின் மீது ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த நபர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் வைஃபை கேபிள்களையும் சேதப்படுத்தினார். பிறகு நடனமாடி பாட்டு பாடி கொண்டு மேலே இருந்துள்ளார். கீழே இறங்குமாறு பலரும் கூறிய நிலையில் அவர் கீழே இறங்குவதாக இல்லை.

இதனால் ஒரு நகராட்சி ஊழியர் அவருக்கு உதவி செய்வதற்காக கட்டிடத்தின் மீது ஏறி உள்ளார். ஆனால் அப்போது அந்த இளைஞர் உதவிக்கு வந்த நபரை தள்ளிவிட்டார். இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அந்த வாலிபரை மீட்க முயன்றனர். இறுதியாக அந்த நபர் மீட்கப்பட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.