பெற்றோர்களே உஷார்..! வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் ஆடிய சிறுவன்… சிறிது நேரத்தில் நடந்த பயங்கரம்..!!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கணவரை இழந்த தேவி என்பவரது 12 வயது மகன் அனில்குமார், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுவன் அனில்குமார் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக, அவனது கழுத்தில் சேலை இறுக்கியதில் மயக்கமடைந்துள்ளான்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவனை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவேஉயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊஞ்சல் விளையாட்டின் போது நடந்த இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.