BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சற்றுமுன் பறந்த உத்தரவு…!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
பள்ளிக்கல்வித் துறையானது, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள்  அமைப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே பள்ளிகளில் கட்டப்பட்டு, பயன்பாடின்றி இருக்கும் செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டிடங்களை ITI அமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது புதிய உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைக்கிறது.

ஏற்கனவே ITI நிலையங்கள் இருக்கும் இடங்கள் அல்லாத பகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். தொழில் மண்டலங்கள் அல்லது தொழில்துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக வேலைவாய்ப்பைப் பெற உதவும். இந்தத் திட்டம், மாணவர்களுக்குத் தொழில் திறன்களை அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும், பள்ளிகளின் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது