மராட்டிய மாநிலம் தலைநகர் மும்பையை அடுத்த பால்கார் மாவட்டம் காசா போலீஸ் நிலையத்தில் 40 வயது போலீஸ்காரர் பொறுப்பாளராக உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் அந்த பெண்ணின் அழகில் மயங்கி சபலம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் காசா போலீஸ் நிலையம் சென்று அங்கிருந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வேலியே பயிரை மேய்த கதையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
