வெளிநாட்டிற்கு சென்ற கணவன்… மருமகளின் அறைக்குச் சென்ற மாமியார்… கட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்து நடந்த சம்பவம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வெளிநாட்டில் கணவன் பணியாற்றி வரும் நிலையில் திருமணமான பெண் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் தன்னுடைய கள்ளக்காதலனை ரகசியமாக வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வந்ததாக உறவினர்கள் சந்தேகத்துள்ளனர். இந்த சந்தேகத்தால் அறையின் கதவை தட்டிய மாமனார் மாமியார் உள்ளே நுழைய முயன்ற போது அந்த பெண் தன்னுடைய காதலனை கட்டிலுக்கு கீழ் மறைத்து விட்டதாக தெரிகிறது. பிறகு உறவினர்கள் கட்டிலை திறந்து பார்த்தபோது அங்கு ஒளிந்திருந்த நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவ தொடங்கிய நிலையில் பெண்ணின் கணவரின் குடும்பத்தினர் அதிரடியாக முடிவு எடுத்து அந்த பெண்ணுக்கும் காதலனுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைத்தனர். கட்டிலுக்கு அடியில் இருந்த காதலன் வெளியே வரும் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.