தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவே உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த நிலையில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அதிமுக தலைமைக்கு எதிராக இருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் திடீரென விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். யுவர் அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் என்பதால் அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எட்டு முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த இவருக்கு பதிலாக அதிமுக சார்பில் யாரை நிறுத்தலாம் என இபிஎஸ் தீவிர ஆலோசனையில் இருந்த நிலையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே கே செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்துள்ளார். இதனால் செங்கோட்டையனை எதிர்த்து அதிமுக சார்பில் அவருடைய அண்ணன் மகனை நிறுத்த இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டி வலுவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
