கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள கே.ஆர்.பேட்டை பகுதியில், குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் தனியார் பள்ளிப் பேருந்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கிக்கேரி பள்ளியில் இருந்து வத்தரஹள்ளி நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கும்பல், பேருந்தில் இருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடுமாறு ஓட்டுநரை மிரட்டியுள்ளனர்.
In #Mandya‘s #KRPete, a group of drunk miscreants stopped a private school bus, created a ruckus, and forced the driver to make a 9th-standard girl student get off the bus.
The incident occurred on the route from the #Kikkeri school to #Vaddarahalli.
The bus driver has recorded… pic.twitter.com/yi0IoQJF6z
— Hate Detector 🔍 (@HateDetectors) December 9, 2025
பேருந்து ஓட்டுநர் இந்தச் சம்பவத்தின் முழு வீடியோவையும் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
