சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நீ வருவாய் என படத்துக்கு பிறகு அஜீத்குமார் எங்களை ஒரு ஆண்டு காத்திருக்க சொன்னார். ஆனால் நானும் தேவயானியும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்ததால் ஒரு புதிய படம் தொடங்க திட்டமிட்டோம். இதை தெரிந்துக்கொண்ட அஜீத், நீங்க இந்த படம் பண்ணக்கூடாது. பண்ணினால் நானே சூட்டிங்கை நிறுத்தி விடுவேன். எனக்கு ஒரு படம் பண்ணிட்டு இதை பண்ணுங்க என்று சொன்னார்.
அவர் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து நாங்கள் சூட்டிங்கை தொடங்கினோம். 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜீத்குமார் வந்துவிட்டார். மதியம் வரை அங்கேயே இருந்தார். அதன்பிறகு நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீங்க படம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க. நீங்க கஷ்டப்படப் போறீங்க. தலையெழுத்தை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் சொன்ன மாதிரியே அந்த படம் ஆகிவிட்டது என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
