நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து வாழை இலையில் சாப்பிடுவதை பலரும் பழக்கமாக வைத்துள்ளனர். முன்னோர்கள் ஏதாவது ஒன்றை நமக்கு விட்டுச் சென்றால் அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். பெரும்பாலான வீடுகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரங்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவை பொறுத்த வரையில் பெரும்பாலான இடங்களில் வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகின்றது. இந்த நடைமுறை பழமையானது என்றாலும் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனால் பல இடங்களில் சமைக்க மற்றும் பரிமாற வாழை இலை பயன்படுத்தப்படுகிறது.
வாழை இலைகளில் பாலி பினால்கள், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவு பரிமாறும் போது இந்த ஊட்டச்சத்துக்கள் உணவிற்கு மாற்றப்படும். அது நாம் சாப்பிடும் போது நம் உடலை வந்தடையும். வாழை இலையில் உணவு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும்.
வாழை இலையில் இயற்கையாகவே நொதிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உணவை ஜீரணிக்க மிகவும் உதவியாக இருக்கும். இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது.
வாழை இலைகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால் அவற்றில் உணவை சாப்பிடும் போது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை குறைக்கின்றது.
வாழை இலையின் மேற்பரப்பில் உள்ள கூறுகள் பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கின்றன. இதனால் உணவை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது..
வாழை இலைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலி பினால்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். இந்த சேர்மங்கள் உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. வாழை இலைகளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உணவில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை குறைத்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுகின்றது.
பிளாஸ்டிக் அல்லது வேறு பாத்திரங்களை போல் இல்லாமல் வாழ இலைகள் முற்றிலும் இயற்கையானவை என்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் கிடையாது. எனவே வாழ இலைகளில் உணவை பரிமாறுவது பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் காணப்படும் BPA போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் அபாயத்தை நீக்குகின்றது. இது உணவின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்து மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். எனவே இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள வாழை இலையில் சாப்பிடுவதை இனி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
