திமுக+ அதிமுக ஷாக்..! கொங்கு மண்டலத்தில் அதிரடி காட்டும் விஜய்… செங்கோட்டையன் ஆதரவுடன் அதிமுக கோட்டையை தகர்க்க திட்டம்..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

கொங்கு மண்டலத்தில் தங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைக்க அதிமுகவும், எப்படியாவது செல்வாக்கைப் பெற திமுகவும் கடுமையாகப் போட்டியிட்டு களப்பணியாற்றி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரும் வகையில், நடிகர் விஜய் ஒரு சிறப்புத் திட்டம் தீட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி டிசம்பர் 16 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பொதுக்கூட்டம், விஜய்யின் கொங்கு மண்டல வியூகத்திற்கான தொடக்கமாக (அச்சாரமாக) இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மூலம் கொங்கு மண்டலத்தில் த.வெ.க-வை பலப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். அவரது ஆதரவுடன் முக்கிய நிர்வாகிகளை ஈர்த்து, அதிமுகவின் கோட்டையான கொங்குவை தங்கள் வசப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளன