திடீர் திருப்பம்… ஓபிஎஸ் இணையப் போகும் கட்சி இதுதான்… சஸ்பென்ஸை உடைத்த முக்கிய அரசியல் புள்ளி…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டப்பேரவை தேர்தலை டார்கெட் செய்துள்ளது. அதற்காக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்ப்பது, விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது, கொங்கு மண்டல தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்டு பெறுவது போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணியை பலமாக வைத்திருந்த பாஜகவிற்கு அதிமுகவின் வருகையால் அது காணாமல் போய்விட்டது. பாஜகவில் தங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை என்று கூறிய ஓபிஎஸ் முதலில் கட்சியிலிருந்து விலக அவருக்கு பிறகு முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்ஐ ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரனும் பாஜகவில் இருந்து விலகினார்.

இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடர்ந்து கொண்டிருக்க இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்த அமித்சாவை அதிமுகவை சேர்ந்த பலரும் டெல்லி சென்று சந்தித்தனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு அமித்ஷாவின் அழைப்பை தொடர்ந்து டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றியும் பேசியதாக கூறியிருந்தார். ஆனால் இவர் கூறிய பதில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவதை அமித்ஷாவிடம் கூறிவிட்டார்.

   

மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்ற பல விவாதங்களும் எழுந்தது. இப்படியான நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, ஓபிஎஸ் எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில் தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது என்று கூறி அவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஓபிஎஸ் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் அவரை நீங்கள் கருத்து ஏறத்தாழ உண்மை என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்..