“குஷியோ குஷி” புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துளீர்களா..? தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

தமிழக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் அட்டைகள் மூலமாக அழிவுகளில் அரிசி பருப்பு சீனி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருப்பதன் மூலமாக ரேஷன் பொருட்கள் மட்டும் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக தான் கொடுக்கப்படுகிறது இதனால் ஏராளமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில்புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் நீடிப்பதாக புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 55,000 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை வேண்டி 1.08 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், அதனை பரிசீலனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.