அடுத்த பரபரப்பு… தவெகவில் இணையும் திமுகவின் கூட்டணி கட்சி?… செம ஷாக்கில் ஸ்டாலின்… குஷியில் துள்ளும் விஜய்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் போட்டி நிலவிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்ததால் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலுக்கு 5 சீட்டுகள் கேட்டிருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பு கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள் தான் ஒதுக்க வேண்டும் என முடிவில் இருக்கிறதாம். ஒருவேளை கொடுக்காத பட்சத்தில் IUML தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் சமீப காலமாகவே திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளும் தொடர்ந்து கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் ஸ்டாலினுக்கு இது மிகப்பெரிய தலைவலியாகவே மாறி உள்ளது.