திடீர் திருப்பம்… அண்ணாமலையை சந்தித்த ஓபிஎஸ்… மீண்டும் NDA கூட்டணி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கட்சியில் இணைய மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனிடையே டெல்லிக்கு சமீபத்தில் சென்ற ஓபிஎஸ் அமித்சாவை சந்தித்து பேசி இருந்தார். ஆனால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார். இதற்குப் பின்னால் அதிமுக ஒருங்கிணைப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இப்படியான நிலையில் கோவையில் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் ஓபிஎஸ் இருவரும் சந்தித்துக் கொண்டது பேசு பொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்பு குழு நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால் மீண்டும் NDA கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளது.