“காத்து வாக்குல ரெண்டு காதல்”… ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கர்ப்பமாக்கிய வாலிபர்… தமிழகத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பிரவீன் (22) என்பவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனால் பிரவீன் மற்றும் மாணவி இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் வெளியில் சுற்றி தெரிந்தனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில் பிரவீனுக்கும் ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இது தெரியாமல் பள்ளி மாணவி மீண்டும் பிரவீனிடம் பேசத் தொடங்கிய நிலையில் ஒரே நேரத்தில் பிரவீன் இருவரையும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கல்லூரி மாணவி கர்ப்பம் அடைந்தார். பிரவீன் அவருடைய வீட்டுக்கு தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

   

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பள்ளி மாணவி அவருடைய வீட்டில் மயக்கமடைந்த நிலையில் அவரது பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது உண்மையை கூற வழக்கு பதிவு செய்து பிரவினை தேடி வந்தனர். ஊட்டியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

   

மேலும் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி பள்ளி மாணவிக்கும் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இரண்டு மாணவிகளும் கையில் குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் இரண்டு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரவினை பார்க்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.