Presidential Palace

ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து – இதில் பரிமாறப்பட்ட ஸ்பெஷல் அயிட்டம் என்ன தெரியுமா?

By Elango on மார்கழி 7, 2025

Spread the love

இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்டமான இரவு உணவு விருந்து ஜனாதிபதி முர்மு சார்பில் அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்தியா ரஷ்யா நாட்டு தூதர்களும் கலந்துக்கொண்டனர். இரவு உணவில் விளாடிமிர் புதினுக்கு பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவாகும்.

இந்த விருந்தில் ஸ்பெஷல் ஐட்டமாக இருந்தது காஷ்மீர் உணவான குச்சி தூன் செடின். இது மிகவும் விலை உயர்ந்த குச்சி காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் இதன் விலை கிலோ 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாயாக உள்ளது. குச்சி காளான்கள் மிகவும் அரிதானது என்பதால் விலை அதிகம். ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற இமயமலை பகுதிகளில் மட்டுமே இது வளரும். இந்த ஸ்பெஷல் ஐயிட்டம் ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விருந்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.