திமுகவின் முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவர நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தர்மபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
