அடுத்த விக்கெட் அவுட்… தவெகவுக்கு செல்லும் திமுகவின் முக்கிய அமைச்சர்?… ஸ்டாலினுக்கு விஜய் வைக்க போகும் ஆப்பு…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீப காலமாகவே விஜய் கட்சியில் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த கையோடு நேற்று முன்தினம் நாஞ்சில் விஜயன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இவர்கள் இருவருக்குமே முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வருவார்கள் என ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார். இதனிடையே அவர்களில் ஒருவர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆக இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தலில் அவருக்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தமிழக வெற்றி கழகம் அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.