தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையிலும் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதில் சிறப்பாக பங்குபெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு பொருட்களும் ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிகளில் இணை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கலை, பண்பாடு, பாரம்பரியம் சார்ந்த விழாக்கள் நடைபெறும் போது மாணவர்களின் பாதுகாப்புக்காக அவசர வழிகள் இருக்க வேண்டும். விழா ஒருங்கிணைப்பு குழுவில் அனைத்து மதம் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒளி ஒலி பாடல்கள் கண்ணியமிக்கவையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
