தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.
இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை நிலைநிறுத்த முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அத்துடன் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி தப்பிக்க முயன்றனர். அப்போதிலிருந்தே தமிழக வெற்றிக்கலகம் கட்சியிலும் உட்கட்சி பிரச்சனை ஆரம்பித்து விட்டது. மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவியதாக தகவல் வெளியானது. இப்படியான சூழலில் தற்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் மோதல் போக்கு வெடித்துள்ளது. செங்கோட்டையன் வருகையால் ஆனந்த் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த கையுடன் அவருக்கு பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சியில் ராஜ்மோகன் கழக கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் நிலையில் அவருக்கு இணையாக புதிதாக வந்தவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் வலிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் புதிதாக சேர்ந்தவர்களை விஜய் முன்னிலைப்படுத்துவதால் அவர் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
