BREAKING: சற்றுமுன் தவெகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…. செம குஷியில் விஜய்….!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.

   

ஜீவா ரவி (Jeeva): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ்  லிஸ்ட் - Filmibeat Tamil

   

இந்நிலையில் செங்கோட்டையன் முன்னிலையில் பிரபல நடிகர் ஜீவா ரவி சற்று முன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செங்கோட்டையனை சந்தித்த பிறகு பேசிய அவர், தற்போது தான் உயிரோடு இருக்க காரணமே செங்கோட்டையன் தான் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மௌன குரு, சாட்டை, இமைக்கா நொடிகள், நெஞ்சுக்கு நீதி, விடாமுயற்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த ஜீவா ரவி தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.