தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்க நிதி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
