நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் இண்டிகோ விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு விமானி மற்றும் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இதனால் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்த பயணிகள் பலரும் ஆங்காங்கே தவிர்த்து நின்ற சம்பவம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்போரை கலங்க வைத்துள்ளது. அதாவது பெண் பயணி ஒருவர் நேற்று காலை ஷில்லாங்கில் இருந்து தன் கணவரின் சவப்பெட்டியுடன் கொல்கத்தாவிற்கு அடக்கம் செய்வதற்காக வந்துள்ளார்.
ஆனால் இண்டிகோ விமான சேவை தடைபட்டதால் தன் கணவர் சடலத்தோடு விமான நிலையத்திலையே தவிர்த்துக் கொண்டிருந்தார். இதை தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், என் கணவர் உயிரிழந்து விட்டார். நான் இன்று காலை என் கணவரின் சவப்பெட்டியுடன் கொல்கத்தாவிற்கு அடக்கம் செய்வதற்காக வந்தேன். ஆனால் இண்டிகோ இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் நான் கவலைப்படுகிறேன். விமானம் புறப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று கூட எனக்கு தெரியவில்லை என்று அவர் கண்ணீரோடு பேட்டி அளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
🚨 LADY PASSENGER : “My husband passed away”
“I came from Shillong this morning with my husband’s coffin to take him to Kolkata for burial, but IndiGo has given no update yet.
“I’m worried. I don’t even know if the flight will take off or get cancelled.” pic.twitter.com/Vhwwef407p
— News Algebra (@NewsAlgebraIND) December 5, 2025
