நாளை (டிச..6) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 6 நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கனமழை காரணமாக டிசம்பர் இரண்டாம் தேதி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6 சனிக்கிழமை நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் நாளை பள்ளிகள் செயல்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.