“கடவுளே காப்பாத்து” ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்த விமானம்… அலறியடித்து தப்பித்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

By Soundarya on மார்கழி 5, 2025

Spread the love

பிரேசிலில், LATAM ஆல் இயக்கப்படும் ஏர்பஸ் A320 விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​கேபின் திடீரென புகையால் நிரம்பியது, பயணிகள் ஜன்னல்கள் வழியாக இறக்கையின் கீழ் தீப்பிழம்புகளைக் கண்டனர். இதனையடுத்து 180 பேரையும் அவசரமாக வெளியேற்றும் பணி உடனடியாகத் தொடங்கியது.

பயணிகள் அவசர பாதை வழியாக வெளியேறி தார் சாலையைக் கடந்து ஓடினர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் நிலைமை மிகவும் ஆபத்தானது. இதனையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.