பள்ளிக் கல்வியின் செயல்திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்யும் நோக்கத்தில் இனி மாதந்தோறும் 5-ம் தேதிகளில் அலுவல் கூட்டம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை அனைத்து பள்ளிகளிலும் அலுவல் ஆய்வு கூட்டம் வீடியோ வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலை மற்றும் பள்ளி ஆண்டாய்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
