“என் மகனை நானே கொன்றேன்”… அண்ணன் பிள்ளைகளையும் சேர்த்துக் கொன்று விட்டேன்.. தாய் செய்த கொடூரம்… நாட்டையே திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி காரணம்…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் நகரத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் அழகின் மீது கொண்ட அதீத மோகத்தால் தனக்கு பிறந்த குழந்தைகள் தன்னைவிட அழகாக இருக்கிறார்கள் என்ற பொறாமை உணர்ச்சியின் சொந்த மகன் உட்பட நான்கு குழந்தைகளை தாய் சாகடித்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பூனம் என்ற அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவர் அளித்த வாக்குமூலம் பதற வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட இந்த கொலைகள் ஆரம்பத்தில் விபத்தாக கருதப்பட்டது.

இந்தப் பெண்ணின் மனநலக் கோளாறின் விளைவாக பலியான நான்கு குழந்தைகளின் அவருடைய அண்ணன் மனைவியின் மூன்று பெண் குழந்தைகளும் இவருடைய சொந்த ஆறு வயது மகனும் அடங்குவர். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் படி, அவர் தன்னுடைய அழகை மிஞ்சும் வகையில் அந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிக பொலிவுடன் இருக்கிறார்கள் என்று ஆழமாக நம்பி உள்ளார். அதனால் தன்னைவிட அவர்களை யாரும் பாராட்டு விடக்கூடாது என்ற பிடிவாதமான மற்றும் நோயுற்ற வெறி அவரை இத்தகைய கொடிய செயல்களை செய்ய தூண்டியுள்ளது.

   

ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையை சாவடித்த பிறகு அதை யாரும் சந்தேகப்படாதவாறு விபத்து போல சித்தரித்துவிட்டு பிறகு இயல்பாக இருந்ததாகவும் எந்த குற்ற உணர்ச்சியும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு இவருடைய அண்ணன் மனைவியின் ஒரு பெண் குழந்தையை சாவடித்ததை தொடர்ந்து மற்ற இரண்டு குழந்தைகளையும் வெவ்வேறு காலகட்டங்களில் நீரில் மூழ்கி சாவடித்துள்ளார். இறுதியாக ஒரு உறவினர் வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த அவருடைய ஆறு வயது அண்ணன் மகளை கொன்ற போது சந்தேகம் வந்துள்ளது.

   

அந்த குழந்தை ஆழம் குறைந்த ஒரு தண்ணீர் தொட்டியில் தலைக்கு பிற மூழ்கி கிடந்ததாகவும் ஆனால் அப்போதும் கூட அதன் கால்கள் தரையில் பட்டுக் கொண்டிருந்ததாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இவ்வளவு குறைவான ஆழத்தில் எப்படி ஒரு குழந்தை மூழ்கி உயிரிழந்திருக்க முடியும் என்ற சந்தேகம் வந்ததால் தொடர்ந்து குழந்தைகளின் மரணங்களை வைத்து விசாரணை நடத்தியதில் பூனம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சாகடிக்க விரும்பிய பெண் குழந்தைகளுக்கு சமமாக அதற்கு முன்பே தன்னுடைய சொந்த மகனை கூட கொன்று விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.