Actor Ashok Selvan

நடிகர் அசோக் செல்வன் எடுத்த திடீர் முடிவு – இதெல்லாம் நமக்கு தேவையா கோபாலு என்று கலாய்க்கும் ரசிகர்கள்!

By Elango on மார்கழி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். போர்த்தொழில் தெகிடி போன்ற சில வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்தும் அவர் நடித்து வருகிறார். இதனால் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு டீசன்ட் ஆன இடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஒரு திடீர் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இனிமேல் அவர் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். அதுபோன்ற கதைகளுடன் தன்னை இயக்க முன்வருமாறு இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஏற்கனவே சந்தானம் ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் ஆக்சன் ஹீரோக்களாக மாறி பல்பு வாங்கிய நிலையில், அசோக் செல்வனின் இந்த முடிவு ரசிகர்களை கடுப்பாக செய்துள்ளது. இதெல்லாம் நமக்கு தேவையா கோபாலு என்று கமெண்ட் செய்து அவரை கலாய்த்து வருகின்றனர்.