actor Rajinikanth

ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபல வில்லன் நடிகர்… ஜெயிலர் 2 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிவிஸ்ட் – இது தரமான சம்பவம் போல இருக்குதே?

By Elango on மார்கழி 4, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அதனால் இந்த படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன் வந்தது. அதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் சம்மதித்தார். இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டவர் வர்மா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன் தான்.

ஆனால் ஜெயிலர் படத்தின் இறுதி காட்சியில் அவர் இறந்து போவதால் அவர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் மலையாளத்தில் அவர் நடித்துள்ள களம் காவல் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தனது காமெடி கலந்த வில்லன் வர்மா கேரக்டர் மிகவும் பேவரைட் என்றும் விநாயகன் கூறியிருக்கிறார். ஆனால் எந்த மாதிரியான கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார் என்பதை சொல்லவில்லை.