AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக ரஜினி கண்ணீர் அஞ்சலி…. பெரும் சோகம்….!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சில காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 5.30 மணி அளவில் காலமானார்.

இவருடைய உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை கேட்டு துடிதுடித்து போன ரஜினி முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சில திரை பிரபலங்கள் இன்னும் சற்று நேரத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.