மணிக்கு 140 KM வேகத்தில் பைக் சாகசம்… தலை துண்டாகி 18 வயது வாலிபர் துடிதுடித்து மரணம்… இளைஞர்களை நடுங்க வைக்கும் சம்பவம்…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

குஜராத்தின் சூரத்தை சேர்ந்த 18 வயது சமூக வலைத்தள பயனாளியான பிரின்ஸ் படேல் என்பவர் தன்னுடைய KTM Duke மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் சிசிடிவி காட்சிகளின் படி அந்த வாலிபர் பல அடுக்கு மேம்பாலமான கிரேட் லைனர் பாலத்தில் இருந்து சுமார் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அப்போது கீழே விழுந்த வேகத்தில் விபத்தையும் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் அவருடைய தலை துண்டிக்கப்பட்டு உடலில் இருந்து தனியாக பிரிந்து விழுந்தது.

விபத்தின் போது அவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் தனது பைக் சாகச ரீல்களுக்காக டீனேஜர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு லைலா என்ற பெயரிட்டு அது குறித்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார். மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கூட தான் சொர்க்கத்தில் இருந்தாலும் லைலா மீதுதான் அதிக பாசம் இருக்கும் என்று உருக்கமாக ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.