சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்ததில் 12 மாவோயிஸ்ட்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . நடப்பு ஆண்டில் சத்தீஸ்கரில் மட்டும் மொத்தம் 275 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
