பேருந்தில் பயணித்த ஐயப்ப பக்தர்கள்… சரண கோஷங்களை எழுப்பிய கேரள பேருந்து நடத்துனர்… காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது ஐயப்பன்தான். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் ஏராளம். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பக்தர்கள் பேருந்து மூலமாகத்தான் ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர்.

இப்படியான நிலையில் கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பம்பா வழி தடத்தில் சென்ற பேருந்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த நிலையில் பேருந்தில் பயணித்த பக்தர்களை உற்சாகமூட்டும் விதமாக பேருந்தின் நடத்துனர் ஐயப்பன் சரண கோஷங்களை பாடினார். கேரள அரசு பேருந்து நடத்துனரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Oneindia News பதிவைப் பகிர்ந்துள்ளார் (@oneindia_en)