தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்தர உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 மார்ச் 31ஆம் தேதி வரை நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாமல் வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வரை விற்று முதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
