அடுத்த பரபரப்பு… தவெகவில் இணையும் 2 திமுக அமைச்சர்கள்…. செம ஷாக்கில் ஸ்டாலின்…..!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையனை  தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ அங்கே அரசியல் தலைவர்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில் திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவார்கள் என்று கூறி பரப்பரப்பை கிளப்பியுள்ளார். மேலும் டெல்டா மண்டலத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.