மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் திமுக எம்பியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கேரளாவில் ஹோர்டஸ் ஆர்ட் அண்ட் லிடரேச்சர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலிடம், எம்பி ஆன தருணம் குறித்து உங்களை கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எம்பி கமல்ஹாசன், “எம்பியாக நான் என்னுடைய முதல் கையெழுத்தை போடும்போது என்னுடைய பெற்றோர் தான் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என என்னுடை அம்மா விரும்பினார். தற்போது 71 வயதில் தான் அது நடந்திருக்கிறது” என்று பெருமையாக பேசியுள்ளார்.
