ஐயோ உயிர் இப்படியா போகணும்?… உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன்… திடீரென ஊர்ந்து வந்த கட்டு விரியன் பாம்பு… அடுத்த நொடியே நிகழ்ந்த சோகம்…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர் பகுதியில் மித்ரன் என்ற 8 வயது சிறுவன் வசித்து வருகின்றான். சிறுவன் சம்பவத்தன்று தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் வீட்டில் தரையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதனால் சிறுவன் அலறி துடித்த நிலையில் உடனே சிறுவனை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த மூன்று நாட்களாக சிறுவனுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தான். இந்த சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவது என்பது சாதாரணமாகிவிட்டது. வீட்டுக்குள் இருக்கும்போது பூச்சிகள் கடிக்காத வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் குட்டைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்களும் முட்டை இட்டு நம்முடைய ரத்தத்தை குடிக்கும்போது வைரசை பரப்பும். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவையும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.