புயல் சின்னம் வேகம் கூடியது.. மீண்டும் கனமழை வெளுக்கும்…. வந்தது அலெர்ட்….!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

டிட்வா புயல் வலுவிழந்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய போதும் மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து அதிகரித்து 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கனமழை தொடர வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் தேவையில்லாத காரணங்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே திருவள்ளூரில் இன்று அதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.