கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உடன் ‘Friendly Match’ விளையாட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 56 வயதான முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி கால்பந்து பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது, ‘G.O.A.T. India Tour 2025’ன் ஒரு பகுதியாக, டிச.13ம் தேதி மெஸ்ஸி ஹைதராபாத் வருகிறார். அப்போது அவருடன் இணைந்து முதல்வர் ரேவந் ரெட்டி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜாம்பவான் மெஸ்ஸி கேரளாவுக்கும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
మా ఆట దడ పుట్టిస్తాది 🔥
ఆది పొలిటికల్ గేమ్ అయిన 🔥
ఫుట్ బాల్ అయిన 🔥@revanth_anumula
The real g.o.a.t🔥#RevanthReddy pic.twitter.com/zAykaND2iA— Akhil reddy (@AkhilRe98313008) December 1, 2025
ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் மாரி சென்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவன மைதானத்தில் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கால்பந்து பயிற்சியில் வியர்த்து ஓடுவதைக் காண முடிந்தது. அவர் ஓடுவது, பந்தைக் கட்டுப்படுத்துவது, தானாக உதைப்பது போன்ற காட்சிகள் காணப்பட்டன. அவரது ஆற்றலும் உற்சாகமும் “வயது என்பது வெறும் எண்” என்ற பழமொழியை நிச்சயமாக நிரூபிக்கிறது.
