தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர்.
தற்போது புதிதாக இணைந்தவர்களின் விவரம் இந்த வாரம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிச.15 ஆம் தேதி முதல் அவர்களுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கப்பட உள்ள நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அரசு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றுவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
