கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கால சமுத்திரம் கிராமம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் நிலையில் இவருடைய தம்பி சுரேஷ் குமார் (26) சின்னசேலம் அடுத்த கிராமத்தில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே நேற்று முன் தினம் இரவு வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டிடம் கறந்த பாலை சொசைட்டுக்கு எடுத்து செல்லாமல் சுரேஷ்குமார் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த சதீஷ் பாலை எடுத்துச் செல்லாமல் ஏன் செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கண்டித்துள்ளார். பிறகு அவரே பாலை சொசைட்டிக்கு எடுத்துச் சென்றார். அண்ணன் திட்டியதில் மனம் உடைந்த சுரேஷ்குமார் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சொசைட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சதீஷ் தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
