தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. வாக்காளர்களை கவர இந்த மாதமே மூன்று மெகா திட்டங்களை அறிவிப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ஏற்கனவே தமிழ் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை கடந்த நான்கரை ஆண்டுகளில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சட்டசபை தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பிறகு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதால் அதற்கு முன்னதாக மூன்று மெகா திட்டங்களை அறிவிக்க தமிழகத்தை ஆளும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இருவது லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு முடிவு செய்துள்ள. அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
அதனைப் போலவே கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டமும் செயல்பாட்டுக்கு வந்து பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் நிறைய பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியவில்லை என புகார் தெரிவித்த நிலையில் தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை டிசம்பர் 15 முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் புத்தாண்டின் தொடக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க தொகையையும் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வருவதால் அடுத்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன. தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 27 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் எவ்வளவு தொகை வழங்குவது என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் தெரிகிறது.
