காலையிலேயே பரபரப்பு… மொத்தமாக தட்டி தூக்கிய செங்கோட்டையில்… விஜய் கட்சியில் கூண்டோடு ஐக்கியம்…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் செங்கோட்டையன் வருகைக்கு பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாற்று கட்சி வரை இணைக்கும் பணி அதிவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று இபிஎஸ் கோபிக்கு வந்த அதே நேரத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தனர்.. அதேபோல சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு முன்னிலையில் மாற்றுக் கட்சியினர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.