பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று (டிசம்பர் 1) முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஆதார் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு பல முக்கிய நிதி விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளின்படி இன்று (டிச.1) முதல் உங்கள் ஆதாரில் பெயர், போன் நம்பர் நீக்கப்பட்டு, வெறும் போட்டோ, QR Code மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் அனைத்து விதமான AutoPay வசதியும் ஒரே UPI APP-ன் கீழ் கொண்டுவரப்படும். சில பரிவர்த்தனைகளுக்கு பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்படலாம். எஸ்பிஐ வங்கியின் mCash சேவை டிசம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
