“லீவு வேணும் சார்…” AI போட்டோவை அனுப்பி ஏமாற்றிய ஊழியர்…! HR-ன் ரியாக்ஷன் என்ன தெரியுமா…? விவாதத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 30, 2025

Spread the love

தற்போது அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு தனியார் நிறுவன ஊழியர் போலியான காயத்தை உருவாக்கி, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை HR-ஐ ஏமாற்றிப் பெற்றுள்ளார். ரோகித் என்ற அந்த ஊழியர், விடுமுறை எடுப்பதற்காக, கூகுள் நேனோ பனானா ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் என்ற AI கருவியைப் பயன்படுத்தினார்.

அதில் தனது கையின் புகைப்படத்தைப் பதிவேற்றி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தது போலவும், நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டது போலவும் ‘பிராம்ட்’ கொடுத்துத் தத்ரூபமான புகைப்படத்தை உருவாக்கினார். அந்தப் புகைப்படத்தை HR-க்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய அவர், பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டதால் டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று கூறி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டார்.

   

இதற்கு HR-ம் ஒப்புதல் அளித்து விடுமுறை வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த மோசடி, எதிர்காலத்தில் பல ஊழியர்களால் கையில் எடுக்கப்படலாம் என்பதால், விடுமுறைகளை அங்கீகரிக்கும் நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.