“இனி இது தான் என் பெயர்” தனது பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் கௌதம் கார்த்திக்…!!

By Soundarya on கார்த்திகை 30, 2025

Spread the love
நடிகர் கௌதம் கார்த்திக் தன்னுடைய பெயரை கௌதம் ராம் கார்த்திக் என்று  மாற்றி கொண்டுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய அவர், ‘எனக்கு அம்மா வைத்த பெயர் கௌதம் ராம் கார்த்திக். சினிமாவில் அறிமுகமானபோது அதை சுருக்கி கௌதம் கார்த்திக் என்று வைத்துக் கொண்டேன்.
சமீபத்தில் எனது தாத்தாவின் சொந்த ஊருக்கு சென்றபோது அவரைப் பற்றி மக்கள் கூறிய நினைவுகள் என்னை அப்படியே  நெகிழ வைத்தது. நான் இந்த இடத்தில் இருக்க என் அப்பாவும், என் தாத்தாவும்தான் காரணம். அதனால் தான் தாத்தாவின் பெயரான ராம்-ஐ மீண்டும் என் பெயருடன் சேர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.