மக்களே உஷார்… சென்னையை நெருங்கிவரும் புயல்… மாலை முதல் அலர்ட்… !

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

டிட்வா புயலின் நகர்வுகளை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டரில் இருந்து 7 km ஆக குறைந்துள்ளது. தற்போது சென்னையிலிருந்து 170 km தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

மாலையில் சென்னைக்கு 30 கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்கி வரும் என்றும் சென்னையில் நாளை காலை வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விடிய விடிய அனைத்து மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.