கன்னட சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்தவர் பிரபல நடிகர் உமேஷ் (80). இவர் உடல்நலக்குறைவால் காலமானார். 1960-ல் வெள்ளித்திரையில் இவரது முதல் படமான மக்கலா ராஜ்யா என்ற படத்தில் சிவாஜி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதுவரை 360 படங்களில் நடித்துள்ள இவர், கர்நாடக அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
